
ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் வருகின்ற அக்டோபர் 11-ஆம் தேதி 80 இசைக் கலைஞர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ ஜெய் ஹோ ‘ என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மார்க் ஸ்வர்ணபூமி தற்காவில் 10 ஆயிரம் சதுர அடியில் 30 ஆயிரம் பார்வையாளர்கள் வரை பார்க்கக்கூடிய அளவில் மிகவும் பெரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது.
ஷக்தி அறக்கட்டளை மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை ஆகியவற்றிற்காக நிதி சேகரிக்க நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், ஹரிஹரன், சிவமணி, பென்னி தயால் உட்பட 80 இசைக்கலைஞர்கள் இந்தியாவில் உள்ள முக்கிய பாடகர்களோடு பங்கேற்கிறார்கள் !
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யபட்டுள்ளது என்பதும் ஆஸ்கர் விருது பெற்ற பின் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் நடத்தும் முதல் இசை நிகழ்ச்சி இதுதான் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது !