Archive | முக்கிய செய்திகள்

Tags: ,

அரசு கலைக் கல்லூரி மாணவிகள் 2வது நாளாக தர்ணா


நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், 2-வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கல்லூரியில் காலைநேர வகுப்பில் 1,758 மாணவிகளும், மாலை நேர வகுப்பில் 402 மாணவிகளும் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர்கள் நிய மனம் செய்யப்படவில்லை. மேலும் நூலகர், ஆய்சக உதவியாளர், இரவு காவலர்கள் போன்ற பணியிடங்களும் காலியாகவே உள்ளன.

இதனால் தங்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி நேற்று 2-வது நாளாக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த நாமக்கல் காவல்துறையினர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Popularity: 39% [?]

Posted in நாமக்கல் செய்திகள், முக்கிய செய்திகள்Comments (0)

மருத்துவக் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுக்கு


ரேங்க் பட்டியலை வெளியிட்டு, மருத்துவக் கல்வி இயக்குநர் கலாநிதி கூறியது:

மெரிட் வரிசைப்படி, மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். இதற்காக, ரேங்க் அடிப்படையில் தனித்தனியே கடிதம் அனுப்பப்படும். கல்லூரி மற்றும் கிடைக்கக் கூடிய இடங்கள் அடிப்படையில், மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் கல்லூரி, சீட் ஆகியவை ஒதுக்கப்படும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மூலம் கிடைத்த மதிப்பொண் சன்றிதழுடன் வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். மேலும், கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், பத்திரிகைகள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படும் கலந்தாய்வு அட்டவணைப்படி, ஒரிஜினல் சான்றிதழுடன் வந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வு தொடர்பான மற்ற விபரங்கள், அழைப்புக் கடிதத்தில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு அட்டவணை (பதிவிறக்க இங்கே சொடுக்கவும் - PDF file )

முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 4ம்தேதி முதல் 8ம்தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்கத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் நடக்கும்.

Popularity: 26% [?]

Posted in முக்கிய செய்திகள்Comments (0)

Tags: ,

சென்னையில் லேசான நிலநடுக்கம் !


சென்னையில் இன்று மாலை சில இடங்களில் மட்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கோயம்பேடு, தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில், இன்று மாலை 5 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

தி.நகர் பகுதியில் வணிக வளாகங்களில் பணியில் இருந்தவர்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பல அடுக்கு மாடிகளில் இருந்து அவசரமாக கீழே இறங்கி ஓடி வந்தனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது.

அந்தமான் தீவுகளில் மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியிருந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Popularity: 32% [?]

Posted in முக்கிய செய்திகள்Comments (0)

நாமக்கல்லில் இன்று...

  • வாக்கெடுப்பு...

    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • Advertise Here
    Advertise Here

    Our Flickr Photos - See all photos

    DSC_0132DSC_0127