இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த குழந்தை!

Rating :
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars
(No Ratings Yet)
Loading ... Loading ...

கரூர் அருகே உள்ள கீரனூர் மீனாட்சி புரத்தை சேர்ந்த ராஜமூர்த்தி (24) - பரிமளா (22) தம்பதியினருக்கு கடந்த 4-ம் தேதி குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர், காரணம் அந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லாததுதான். (இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது).

இக்குழந்தையைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருத்தத்தில் கண்ணீர் வடித்தவன்னம் உள்ளனர். இதனை சரி செய்ய நவீன மருத்துவத்தில் ஏதேனும் வழி உண்டா என விசாரித்தபொழுது கரூர் மருத்துவர்கள் அக்குழந்தையை சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இந்த குழந்தையின் பெற்றோர்கள் கூலி வேலை செய்து வருவதால், குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க தங்களுக்கு போதிய வசதியில்லை என மாவட்ட ஆட்சியாளரிடம், தங்களது குழந்தைக்கு அரசு சிகிச்சை அளிக்க உதவ வேண்டி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.

Popularity: 100% [?]

Leave a Reply

நாமக்கல்லில் இன்று...

  • வாக்கெடுப்பு...

    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • Advertise Here
    Advertise Here

    Our Flickr Photos - See all photos

    DSC_0132DSC_0127