நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், 2-வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கல்லூரியில் காலைநேர வகுப்பில் 1,758 மாணவிகளும், மாலை நேர வகுப்பில் 402 மாணவிகளும் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர்கள் நிய மனம் செய்யப்படவில்லை. மேலும் நூலகர், ஆய்சக உதவியாளர், இரவு காவலர்கள் போன்ற பணியிடங்களும் காலியாகவே உள்ளன.
இதனால் தங்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி நேற்று 2-வது நாளாக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த நாமக்கல் காவல்துறையினர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Popularity: 21% [?]







